மாநில செய்திகள்

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 10,559 கன அடியாக சரிவு + "||" + Mettur dam water inflow reduced to 10559 cubic feet

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 10,559 கன அடியாக சரிவு

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 10,559 கன அடியாக சரிவு
இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 15,409 கன அடியில் இருந்து 10,559 கன அடியாக குறைந்துள்ளது.
சேலம்,

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வந்தது. கடந்த 13 ஆம் தேதி மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 27 ஆயிரம் கன அடியாக அதிகரித்ததை தொடர்ந்து நடப்பாண்டில் 2வது முறையாக மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது.

இந்நிலையில் இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 15,409 கன அடியில் இருந்து 10,559 கன அடியாக குறைந்துள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 94.2 அடியாக உள்ளது. மேட்டூர் அணையில் தற்போது 57.58 டி.எம்.சி. அளவு நீர் இருப்பு உள்ளது. அணையில் இருந்து பாசன தேவைகளுக்காக வினாடிக்கு 650 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 13,500 கன அடியாக உயர்வு
இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 கன அடியாக உள்ளது.
2. மேட்டூர் அணை நீர்வரத்து 20,500 கன அடியாக சரிவு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை குறைந்ததையடுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது.
3. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 26 ஆயிரம் கன அடியாக குறைவு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை குறைந்ததையடுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது.
4. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கன அடி
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து 30 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது.
5. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறையத் தொடங்கியது
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை குறைந்ததையடுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது.