ஹூட் செயலியை தொடங்கி வைத்தார் ரஜினிகாந்த்

எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் கூட இனிமேல் தங்கள் எண்ணங்கள், விருப்பங்கள், யோசனைகளை குரல் மூலம் ஹூட் செயலியில் வெளிப்படுத்த முடியும்.
சென்னை,
ரஜினிகாந்த் தனது மகள் சவுந்தர்யா விசாகன், அம்டெக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி சன்னி போகலாவுடன் இணைந்து நிறுவியுள்ள "ஹூட்" என்ற குரல் அடிப்படையிலான செயலியை இன்று தொடங்கி வைத்தார்.
இந்த செயலி குரல் பதிவு மூலம் நம்முடைய கருத்துகளை பிறருக்குத் தெரியப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ரஜினி காந்த் ஹூட் செயலியில், இந்த புதுமையான, பயனுள்ள செயலியை என்னுடைய குரலில் தொடங்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் கூட இனிமேல் தங்கள் எண்ணங்கள், விருப்பங்கள், யோசனைகளை குரல் மூலம் வெளிப்படுத்த முடியும், என அவருடைய குரலில் பதிவிட்டு செயலியை தொடங்கி வைத்தார்.
மேலும் இதுகுறித்து ரஜினிகாந்த் டுவிட்டரில், ஹூட் - குரல் அடிப்படையிலான சமூக ஊடக தளம், இந்தியாவிலிருந்து உலகிற்கு' என பதிவிட்டுள்ளார்.
Hoote - Voice based social media platform, from India 🇮🇳 for the world 🌍🙏 https://t.co/Fuout7w2Tr
— Rajinikanth (@rajinikanth) October 25, 2021
Related Tags :
Next Story