அரசு சார்பில் கால்நடைகளுக்கு தடுப்பூசி; ஓ. பன்னீர்செல்வம் வேண்டுகோள்


அரசு சார்பில் கால்நடைகளுக்கு தடுப்பூசி; ஓ. பன்னீர்செல்வம் வேண்டுகோள்
x
தினத்தந்தி 25 Oct 2021 9:41 PM GMT (Updated: 2021-10-26T03:11:14+05:30)

கால்நடைகளுக்கு அரசு சார்பில் தடுப்பூசி போட வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


சென்னை,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கால்நடை தேசிய தடுப்பு திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு இரண்டு முறை, கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி நடப்பது வழக்கம்.  இந்த ஆண்டு, இரண்டாவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி, பல மாவட்டங்களில் துவக்கப்பட்டுள்ளது.

ஆனால், காஞ்சீபுரம் மாவட்டத்தில் இன்னும் துவக்கப்படவில்லை.  கோமாரி தடுப்பூசி ஆறு மாதத்திற்கு ஒரு முறை போடப்பட வேண்டும். இந்த முறை தடுப்பூசி மருந்து வருவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

எனவே, நவம்பரில் துவக்கப்படும் என்று தகவல் வந்துள்ளது.  இதனை தனியாரிடம் விலை கொடுத்து வாங்கும் நிலையில் விவசாயிகள் இல்லை.  மழைக்காலத்தில் கால்நடைகளை கோமாரி நோய் தாக்கும் அபாயம் உள்ளது. அரசு சார்பில், அனைத்து கால்நடைகளுக்கும், கோமாரி நோய் தடுப்பூசி விரைவாக செலுத்தப்பட வேண்டும் என தெரிவித்து உள்ளார்.


Next Story