சென்னையில் ரூ.85.23 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்


சென்னையில் ரூ.85.23 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 26 Nov 2021 3:41 AM IST (Updated: 26 Nov 2021 3:41 AM IST)
t-max-icont-min-icon

சென்னை விமான நிலையத்தில் ரூ.85.23 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.



சென்னை,

இலங்கையில் இருந்து சென்னை வந்த விமானம் ஒன்றை
சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் வந்த பயணியர் இருவர் வயிற்றின் அடிப்பகுதியில் தங்க பசை போன்ற பொட்டலங்களை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

இதனை அடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  அதில், ரூ.85.23 லட்சம் மதிப்பிலான 1.97 கிலோ தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் இருவரையும் அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story