சென்னை: கனமழை காரணமாக வெள்ளநீர் தேங்கி உள்ளதால் 2 (தி.நகர் மேட்லி, ராஜங்கபுரம்) சுரங்கப்பாதைகள் மூடல் | தொடர் கனமழை காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு | கனமழை காரணமாக தமிழகத்தில் தூத்துக்குடி, திருவாரூர், புதுக்கோட்டை, நெல்லை, நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர், தஞ்சை, திருச்சி, சென்னை, செங்கல்பட்டு, கடலூர், ராமநாதபுரம், விழுப்புரம், சேலம், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, வேலூர, திருவண்ணாமலை மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு |

மாவட்ட செய்திகள்

மோசமான வானிலையால் சீரடி விமானம் ரத்து சென்னையில் பயணிகள் வாக்குவாதம் + "||" + Siradi flight canceled due to bad weather

மோசமான வானிலையால் சீரடி விமானம் ரத்து சென்னையில் பயணிகள் வாக்குவாதம்

மோசமான வானிலையால் சீரடி விமானம் ரத்து சென்னையில் பயணிகள் வாக்குவாதம்
மோசமான வானிலையால் சீரடி செல்ல இருந்த விமானம் ரத்து செய்யப்பட்டது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமான நிறுவன அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து சீரடிக்கு நேற்று மதியம் 2 மணிக்கு விமானம் புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் 190 பயணிகள், பயணம் செய்ய இருந்தனா். பயணிகள் 12.30 மணிக்கே சென்னை விமான நிலையம் வந்துவிட்டனர்.


ஆனால் சீரடியில் மோசமான வானிலை நிலவுவதால் விமானம் தாமதமாக புறப்படும் என்று தனியாா் விமான நிறுவன அதிகாரிகள் அறிவித்தனா். இதனால் பயணிகள், விமான நிலையத்தில் காத்திருந்தனா். சிறிது நேரத்தில் சீரடியில் வானிலை இன்னும் சரியாகவில்லை. எனவே விமானம் ரத்து செய்யப்படுகிறது. சீரடிக்கு நாளை(அதாவது இன்று) விமானம் புறப்பட்டு செல்லும் என்று அறிவித்தனா்.

இதை கேட்ட பயணிகள் அதிா்ச்சி அடைந்தனா். சீரடிக்கு செல்பவா்கள் 48 மணி நேரத்துக்கு முன்பு கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழுடன்தான் பயணிக்க வேண்டும். நாளைக்கு பயணம் என்றால் ஏற்கனவே செய்த கொரோனா பரிசோதனை சான்றிதழ் காலாவதி ஆகிவிடும். மீண்டும் புதிய பரிசோதனை சான்றிதழ் எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று கூறி விமான நிறுவன அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் இதில் தங்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் விமான நிறுவனம், எங்கள் மீது தவறு எதுவும் இல்லை. மோசமான வானிலையால் விமானம் ரத்து செய்யப்பட்டது என்று கூறிவிட்டனா். வாக்குவாதம் செய்த பயணிகளை விமான நிலைய அதிகாரிகளும், பாதுகாப்பு அதிகாரிகளும் அமைதிப்படுத்தி அனுப்பி வைத்தனா்.

இது போல் சீரடியில் இருந்து மாலை 6 மணிக்கு சென்னை வரவேண்டிய பயணிகள் விமானமும் ரத்து செய்யப்பட்டது. அந்த விமானத்தில் சென்னை வர இருந்த 105 பயணிகளும் சீரடியில் தவித்து கொண்டிருக்கின்றனா்.

மோசமான வானிலை காரணமாக சென்னையில் இருந்து சீரடிக்கும், சீரடியில் இருந்து சென்னைக்கும் 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் 295 பயணிகள் அவதிக்கு உள்ளானார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. வரும் 29ந்தேதி வேளாண் சட்டங்கள் ரத்து வரைவு சட்ட மசோதா 2021 தாக்கல்
வேளாண் சட்டங்கள் ரத்து வரைவு சட்ட மசோதா 2021, வருகிற 29ந்தேதி குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
2. 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா: நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல்
3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா 29-ந் தேதி தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
3. விமானம், வானூர்தி உதிரிபாகங்கள் உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டும்
விமானம், வானூர்தி உதிரிபாகங்கள் உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டும்
4. ஆந்திராவில் வெள்ளப்பெருக்கு எதிரொலி: வடமாநிலங்களுக்கு செல்லும் ரெயில்கள் ரத்து
ஆந்திராவில் வெள்ளப்பெருக்கு எதிரொலி: வடமாநிலங்களுக்கு செல்லும் ரெயில்கள் ரத்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு.
5. வன்னியர் உள் இடஒதுக்கீடு ரத்து: சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி முக்குலத்தோர் புலிப்படை வரவேற்பு
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு ரத்து: சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி முக்குலத்தோர் புலிப்படை வரவேற்பு.