மாநில செய்திகள்

திரைப்பட விமர்சனங்களை தவிர்க்க வேண்டும்: கட்சி நிர்வாகிகளுக்கு அண்ணாமலை வலியுறுத்தல் + "||" + Dont comment about all films - TN Bjp leader Annamalai

திரைப்பட விமர்சனங்களை தவிர்க்க வேண்டும்: கட்சி நிர்வாகிகளுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்

திரைப்பட விமர்சனங்களை தவிர்க்க வேண்டும்: கட்சி நிர்வாகிகளுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்
திரைப்படத்துறை குறித்து தேவையற்ற விமர்சனங்கள் விவாதங்கள் கருத்துக்களை கட்சி நிர்வாகிகள் தவிர்க்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ வரலாறு மற்றும் உண்மை சம்பவங்களை  மையமாக கொண்டு வரும் திரைப்படங்களில் உண்மைக்கு புறம்பாகக் கருத்துகள் வந்தால் அதை மக்களுக்கு எடுத்துரைப்பதில் எந்த தவறும் இல்லை. சில இடத்திலே பாரதிய ஜனதா கட்சி நம்முடைய கண்டனங்களையும் கடுமையாக பதிவும் செய்திருக்கிறது.

திரைப்படம் என்பது பெரும்பாலும் இயக்குநரின் கற்பனையின் வெளிப்பாடு அவர்கள் பார்த்த படித்த மற்றும் கேள்விப்பட்ட சம்பவங்களின் அடிப்படையில் ஒரு திரைப்படம் உருவாகிறது. நமது கட்சி சகோதர  சகோதரிகள், சில நேரங்களில் பொழுதுபோக்கு திரைப்படங்களையும் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

கட்சியில் முக்கியப்பதவியில் இருக்கும் யார் சொல்லும் கருத்தும் கட்சியின் கருத்தாக மாறுகின்ற சூழல் இருக்கிறது.  அது நிறைய நேரத்தில் நமது கட்சியின் கருத்தாக மாறிவிடுகிறது. எப்பொழுது எதற்காக பேச வேண்டுமோ அப்பொழுது பேச வேண்டும் பேசக்கூடாத நேரத்தில், பேசுவதை தவிர்க்க வேண்டிய இடத்தில் பேசாமல் இருப்பது அதைவிட முக்கியமான அரசியல் நயம். 

நமது இலக்கு, நமக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பு, நமக்கு முன் இருக்கும் சவால்கள் இவற்றை மனதில் கொண்டு கவனமாகச் செயல்படுங்கள். எனவே திரைப்படத்துறை குறித்து தேவையற்ற விமர்சனங்கள் விவாதங்கள் கருத்துக்களை கட்சி நிர்வாகிகள் தவிர்க்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. மோடியை அடித்து விடுவேன் என சர்ச்சை பேச்சு: நானா படோலேவுக்கு எதிராக போராட்டம்
மராட்டிய காங்கிரஸ் தலைவரான நானா படோலேயை கண்டித்து மும்பை, தானேயில் பா.ஜனதாவினர் போராட்டம் நடத்தினர்.
2. சமாஜ்வாடி கட்சியில் இணைந்த முன்னாள் மந்திரி- பாஜகவுக்கு மேலும் பின்னடைவு
முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மந்திரிசபையில் இருந்து அடுத்தடுத்து மந்திரிகள் ராஜினாமா செய்து வருவது ஆளும் கட்சிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
3. உத்தர பிரதேசத்தில் மேலும் ஒரு மந்திரி ராஜினாமா- பாஜக அதிர்ச்சி
தேர்தல் நேரத்தில் அடுத்தடுத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் பதவி விலகி வருவது பாஜகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
4. தெலுங்கானா மாநில பா.ஜ.க. தலைவரின் நீதிமன்ற காவலை ரத்து செய்தது ஐகோர்ட்டு!
பண்டி சஞ்சய் குமாருக்கு விதிக்கப்பட்ட 14 நாட்கள் நீதிமன்ற காவல் தீர்ப்பை ரத்து செய்து இடைக்கால உத்தரவை பிறப்பித்தது ஐகோர்ட்டு.
5. தெலுங்கானாவில் பா.ஜ.க.வின் ‘தர்ம யுத்தம்’ ஆரம்பம் - பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா
பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா தெலுங்கானா மாநில பாஜக தலைவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட தெலுங்கானாவிற்கு வருகை தந்துள்ளார்.