மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி - தமிழக அரசு அரசாணை வெளியீடு
கூட்டுறவு சங்களில் மகளிர் சுய உதவிக்குழுவினர் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
சென்னை,
ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவிக்குழுவினர் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட திருத்த நிதி நிலை அறிக்கையில், கூட்டுறவு சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகையான 2,756 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் கூட்டுறவு நிறுவனங்களில் வழங்கப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 மார்ச் 31 வரை நிலுவையில் இருந்த கடன்களுக்கான அசல் மற்றும் வட்டி முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
அதே சமயம் தமிழக அரசால் வழங்கப்பட்ட குடும்ப அட்டை மற்றும் ஆதார் விவரங்களை அளிப்பவர்களே கடன் தள்ளுபடிக்கு தகுதி உடையவர்கள் என்றும் தரவுகள் சரியாக இல்லாத கடன்களுக்கு இத்திட்டம் பொருந்தாது என்றும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story