அன்வர்ராஜா மீது நடவடிக்கை எடுத்ததற்கு பா.ஜ.க. காரணமா? ஜெயக்குமார் பதில்


அன்வர்ராஜா மீது நடவடிக்கை எடுத்ததற்கு பா.ஜ.க. காரணமா? ஜெயக்குமார் பதில்
x
தினத்தந்தி 5 Dec 2021 12:20 AM IST (Updated: 5 Dec 2021 12:20 AM IST)
t-max-icont-min-icon

ஹலோ எப்.எம்.மில் ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 10 மணிக்கு ஒலிபரப்பாகும் ‘ஸ்பாட்லைட்’ நிகழ்ச்சியில், அ.தி.மு.க. செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயகுமார் கலந்துகொண்டு பேசுகிறார்.

அதில், நடைபெற உள்ள அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல் குறித்து பேசுகையில், அ.தி.மு.க.வில் பொதுக்குழுதான் உயரிய அதிகாரம் படைத்தது என்றும் அதற்கு கட்சி விதிகளில் திருத்தம் செய்ய அதிகாரம் இருப்பதாகவும், அதன் அடிப்படையிலேயே பொதுச்செயலாளர் பதவி இல்லை என்று முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள ஒருங்கிணைப்பாளர், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு போட்டி இருந்தால் மட்டுமே வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் பின்னணியில் பா.ஜ.க. இருப்பதாக கூறுகிறார்களே என்ற கேள்வி குறித்து பதிலளிக்கையில், கட்சிக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் எழலாம். ஆனால் அவற்றை பொதுவெளியில் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அன்வர்ராஜாவை பொறுத்தவரையில் அவர் மீது நடவடிக்கை எடுத்தது சரிதான் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில், எங்களை யாரும் ஆட்டுவிக்க முடியாது என்றும், யாருடைய கட்டுப்பாட்டிலும் கட்சி இல்லை என்றும் பதில் அளித்துள்ளார்.

மேலும் வரவிருக்கும் நகர்ப்புற தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றிக்கான வியூகம், பா.ம.க.வோடு மீண்டும் கூட்டணி ஏற்படுமா? உள்பட நிகழ்ச்சி தொகுப்பாளர் ராஜசேகரின் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளார்.


Next Story