5-ம் ஆண்டு நினைவு தினம்: ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அஞ்சலி
5-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று அஞ்சலி செலுத்தினர். அப்போது, ‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வை வெற்றி பெற விட மாட்டோம்’ என்று உறுதிமொழி ஏற்றனர்.
சென்னை,
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் 5-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும், பூக்களை தூவியும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், அமைப்பு செயலாளர்கள் பொன்னையன், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ., தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், இலக்கிய அணி செயலாளர் வைகை செல்வன், திரைப்பட இயக்குனர் பி.சி.அன்பழகன் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் அஞ்சலி செலுத்தினார்கள். எடப்பாடி பழனிசாமி உள்பட நிர்வாகிகள் சிலர் கருப்புச்சட்டை அணிந்து வந்திருந்தனர்.
பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் ஜெ.தீபக் உள்ளிட்டோரும் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.
உறுதிமொழி ஏற்பு
அதனைத்தொடர்ந்து அ.தி.மு.க. சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் ஓ.பன்னீர்செல்வம் 12 உறுதிமொழி வாசகங்களை வாசித்தார்.
அதில் சில வாசகங்கள் வருமாறு:-
* பொய்யான வாக்குறுதி பல தந்து, தமிழர்களை ஏமாற்றி நாடாளும் பொய்யர்களின் குடும்பத்தின் ஆட்சிக்கு முடிவெழுத உறுதி ஏற்கிறோம்.
* அம்மா உணவகங்கள், அம்மா மருந்தகங்கள் பெயரை மாற்ற நினைக்கின்றார். ஜெயலலிதாவின் புகழை மறைக்க நினைக்கின்றார். திட்டத்தை நிறுத்திட்டால் அவர்களின் கொட்டத்தை அடக்கிடுவோம்.
* பொய் வழக்கு பல போட்டு நம்மை முடக்கிவிட நினைப்போரின் ஆணவத்தை அடக்கிடுவோம். அ.தி.மு.க.வை அழித்திடலாம் என்று பகல் கனவு காண்போரின் சதி வலையை அறுத்தெறிவோம்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
* ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு, கல்வி கடன் ரத்து என்றார். விலைவாசி குறையும் என்றார். பொய் முதல்வர் செய்தாரா... இனிமேலும் தமிழர்களை ஏமாற்ற விடமாட்டோம்.
* கடந்த உள்ளாட்சி தேர்தலில் சதி செய்து வெற்றி பெற்றார். அதிகார பலம் கொண்டு வெற்றி பெற்றார். நகர்ப்புற உள்ளாட்சிக்கு தேர்தல் வருகிறது. நமக்கு உத்வேகம், உற்சாகம் தருகிறது. இனி பிரித்தாளும் சூழ்ச்சி செய்து, எதிரிகள் வெற்றி பெற முடியாது. வெற்றி பெற விட மாட்டோம்.
* அ.தி.மு.க ஒரு இரும்பு கோட்டை, எந்த கொம்பாதி கொம்பனாலும் அசைக்க முடியாது என்ற வரலாற்றை மாற்றுவதற்கு விட மாட்டோம்.
* நிலைக்கட்டும் எம்.ஜி.ஆரின் புகழ், வெல்லட்டும் ஜெயலலிதாவின் புகழ், இனிமேல் எப்போதும், எங்கெங்கும் வெற்றிகள்தான் என்று உறுதி ஏற்கிறோம்.
மேற்கண்டவாறு அ.தி.மு.க.வினர் உறுதிமொழி ஏற்றனர்.
பின்னர் அ.தி.மு.க.வினர் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தங்கள் வீடுகளில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
நலத்திட்ட உதவிகள்
ஜெயலலிதா சமாதியில் அவருடைய தீவிர விசுவாசிகள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்று வேடமணிந்த கலைஞர்கள் வந்து அஞ்சலி செலுத்தினர். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஜெயலலிதா உருவப்படங்களை வைத்து அ.தி.மு.க. வினர் மரியாதை செலுத்தினார்கள். ஏழை-எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
அதன்படி சென்னை தியாகராயநகரில் அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில இணை செயலாளர் டாக்டர் சுனில் தலைமையில் 100 பேருக்கு இஸ்திரி பெட்டிகள் வழங்கப்பட்டன.

Related Tags :
Next Story