போலீஸ் விசாரணையால் உயிரிழந்த மாணவர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு


போலீஸ் விசாரணையால் உயிரிழந்த மாணவர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு
x
தினத்தந்தி 8 Dec 2021 4:32 AM IST (Updated: 8 Dec 2021 4:32 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் விசாரணையால் உயிரிழந்த மாணவர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு - டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.

சென்னை,

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

ராமநாதபுரம் மாவட்டம், கீழத்தூவல் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு கடுமையான காயங்களுடன் வீடு திரும்பிய மணிகண்டன் என்ற மாணவர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்தார் என்ற செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது.

போலீஸ் நிலையத்தில் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டதுதான் மாணவர் மணிகண்டனின் மரணத்திற்கு காரணமாகும். மக்களை காக்க வேண்டிய காவலர்களே விசாரணை என்ற பெயரில் உயிரிழப்பை ஏற்படுத்துவதை ஏற்க முடியாது. இதற்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட வேண்டும்.

உயிர் இழந்த மாணவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன். மாணவர் மணிகண்டனின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story