தேர்வில் பெண் விடுதலைக்கு எதிரான கேள்வி: வினாத்தாள் தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வில் பெண் விடுதலைக்கு எதிரான கேள்வி இடம்பெற்ற விவகாரத்தில் வினாத்தாள் தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை,
“ஆணும், பெண்ணும் நிகரென கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையகம் தழைக்குமாம்” என்ற மகாகவி பாரதியாரின் வாக்கிற்கிணங்க பெண்களின் உரிமைக்காகவும், முன்னேற்றத்துக்காகவும் மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு சட்டங்களை இயற்றியதன் விளைவாக, பெண்கள் பல துறைகளில் சிறந்து விளங்குவதோடு, நாட்டையும் ஆளுகின்ற நிலைக்கு முன்னேறி இருக்கிறார்கள்.
தொட்டில் குழந்தை திட்டம், பெண் பாதுகாப்பு திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் என பல திட்டங்களை பெண்களுக்காக அளித்து அவர்களின் முன்னேற்றத்துக்கு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழிவகுத்தார். தமிழகம் உள்பட அனைத்து மாநில அரசுகளும் பெண்களின் முன்னேற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.
பெண் விடுதலைக்கு எதிரான...
இந்தநிலையில், மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ.) கீழ் நடத்தப்படும் 10-ம் வகுப்பு முதலாம் பருவ தேர்வுக்கான ஆங்கில வினாத்தாளில் பெண் விடுதலைக்கு எதிரான சொற்றொடர்கள் இடம்பெற்று இருப்பதாக செய்திகள் வந்துள்ளன.
அதாவது, குழந்தைகளிடையே ஒழுக்கமின்மை நிலவுவதற்கும், சமூக பிரச்சினைகளுக்கும் பெண் விடுதலைதான் காரணம் என்பது போன்ற வாக்கியங்கள் அந்த வினாத்தாளில் இடம் பெற்றிருந்ததாகவும், அதற்கு விடைகளாக ‘எழுத்தாளர் ஓர் ஆண் பேரினவாத நபர்' மற்றும் ‘எழுத்தாளர் வாழ்க்கையை இலகுவாக அணுகுகிறார்' என 2 விடைகள் கொடுக்கப்பட்டு இருந்ததாகவும், இதில் ஒன்றை தேர்வு செய்யுமாறு மாணவ-மாணவியர் கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த கேள்வி பெண் விடுதலையை அவமதிப்பதோடு, பெண் விடுதலைக்காக பாடுபட்டவர்களை, பாடுபட்டு கொண்டு இருப்பவர்களை இழிவு படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது. பாரதி கண்ட கனவை நசுக்கும் இந்த செயல் கடும் கண்டனத்துக்குரியது.
கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம்
பெண்ணுக்கு எதிரான இத்தகைய கருத்துகள் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதோடு, மத்திய-மாநில அரசுகளின் கொள்கைகளுக்கு எதிராகவும் அமைந்துள்ளது. இதுமட்டுமல்லாமல், படிக்கின்ற மாணவ-மாணவிகளிடையேயும் ஒருவிதமான குழப்பத்தையும், பேதத்தையும் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. தற்போது அந்த வினா நீக்கப்பட்டு, அந்த வினாவிற்கான முழு மதிப்பெண் அனைவருக்கும் வழங்கப்படும் என்று மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்துள்ளது. இது கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் என்பதை போல் உள்ளது.
தேர்வுக்கான வினாத்தாள்களை தயார் செய்வதற்கு முன்பு, சமுதாயத்துக்கு எதிரான கருத்துகள், சர்ச்சைக்குரிய கருத்துகள், கலவரத்தை தூண்டும் வகையிலான கருத்துகள் இடம் பெறுவது தவிர்க்கப்பட வேண்டும் என்ற அறிவுரையை வினாத்தாள் தயாரிப்பவர்களுக்கு வழங்கவேண்டிய கடமையும், அதற்கேற்ப வினாத்தாள் தயாரிக்கப்பட்டு இருக்கின்றனவா என்பதை கண்காணிக்க வேண்டிய பொறுப்பும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்துக்கு உண்டு.
எனவே, இதுகுறித்து மத்திய இடைநிலை கல்வி வாரியம் தீர விசாரணை நடத்தி, தவறு இழைத்தோர் மீது தக்க நடவடிக்கை எடுப்பதோடு, இதுபோன்ற தவறுகள் இனி வருங்காலங்களில் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story