வட்டாரக்கல்வி அலுவலர் பணி: சான்றிதழ் சரிபார்ப்பை இம்மாத இறுதிக்குள் நடத்த வேண்டும்


வட்டாரக்கல்வி அலுவலர் பணி: சான்றிதழ் சரிபார்ப்பை இம்மாத இறுதிக்குள் நடத்த வேண்டும்
x

வட்டாரக்கல்வி அலுவலர் பணி: சான்றிதழ் சரிபார்ப்பை இம்மாத இறுதிக்குள் நடத்த வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு அரசின் தொடக்கக்கல்வித்துறையின் நிர்வாக பணியான வட்டாரக் கல்வி அலுவலர் பணிக்கு 97 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 27-ந்தேதி வெளியிடப்பட்டது. அதன்படி விண்ணப்பித்த 42 ஆயிரத்து 868 பேருக்கு 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டு, அவற்றின் முடிவுகள் கடந்த ஜனவரி 27-ந்தேதி வெளியிடப்பட்டன.

அடுத்த சில வாரங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்டிருந்தால், அவர்களுக்கு எப்போதோ வேலை வழங்கப்பட்டு பல மாதங்களாக ஊதியமும் பெற்றிருப்பார்கள். ஆனால், முடிவுகள் வெளியிடப்பட்டு 10 மாதங்களாகியும் இன்னும் சான்றிதழ்கள் கூட சரிபார்க்கப்படவில்லை.

எனவே இனியும் தாமதிக்காமல் வட்டாரக்கல்வி அலுவலர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பை இந்த மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும். புத்தாண்டில், தேர்ந்தெடுக்கப்பட்ட 97 பேருக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கி, அவர்களின் வாழ்வில் புது வசந்தம் மலருவதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story