பிரபல நகைக்கடையில் 15½ கிலோ தங்க, வைர நகைகள் கொள்ளை
வேலூரில் பிரபல நகைக்கடையில் மர்ம நபர்கள் சுவரில் துளைபோட்டு 15½ கிலோ தங்க, வைர நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
வேலூர்,
வேலூர் மாநகரில் எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் வேலூர்-காட்பாடி ரோட்டில் தோட்டப்பாளையம் தர்மராஜா கோவில் அருகே 4 தளங்களை கொண்ட கட்டிடத்தில் பிரபலமான ‘ஜோஸ் ஆலுக்காஸ்’ நகைக்கடை உள்ளது.
தரைத்தளத்தில் தங்கம், வைர நகைகளும், முதல் தளத்தில் வெள்ளிப்பொருட்களும் வைக்கப்பட்டு இருந்தன. 2-வது தளத்தில் நகைக்கடை ஊழியர்கள் தங்குமிடம் உள்ளது. 3 மற்றும் 4-வது தளத்தில் தனியார் ஆஸ்பத்திரியின் ஆய்வகம் செயல்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து வழக்கம்போல் ஊழியர்கள் நகைக்கடையை பூட்டிச் சென்றனர். இரவில் கடையின் வெளியே காவலாளிகள் பணியில் இருந்தனர்.
சுவரில் துளை
நேற்று காலை 9.30 மணி அளவில் ஊழியர்கள் வந்து கடையை திறந்தனர். அப்போது கடையில் இருந்த நகை பெட்டிகள் திறந்து கிடந்தன. மேலும், ஷோகேசில் இருந்த நகைகளும் மாயமாகி இருந்தன. மேலும் கடையின் பின்புறத்தில் சுவரில் ஒருநபர் செல்லும் வகையில் சிறிய அளவிலான துளையும் இருந்தது. இதனால் கடையில் கொள்ளை நடந்திருப்பதை அறிந்து ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மோப்பநாய் சிம்பா வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அது கடையில் இருந்து அருகில் இருந்த காலி இடத்தின் வழியாக ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்களும் வந்து சம்பவ இடத்தில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.
15½ கிலோ தங்க, வைர நகைகள் கொள்ளை
வேலூர் சரக டி.ஐ.ஜி.பாபு, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் ஆகியோர் வந்து கடை ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். நகைக்கடை முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதை ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையர்கள் முகமூடி அணிந்து வருவதும், அங்கிருந்த கேமராக்களில் பெயிண்ட் ஸ்பிரே அடித்ததும் பதிவாகி இருந்தது.
மேலும் கொள்ளை நடந்த நகைக்கடை இருக்கும் காட்பாடி சாலையில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. அவற்றையும் அருகில் கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் கடையில் 15 கிலோ தங்க நகைகளும், ½ கிலோ வைர நகைகளும் கொள்ளை போனது தெரிய வந்துள்ளது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.7 கோடி ஆகும். தொடர்ந்து கொள்ளை போன நகைகளின் துல்லிய மதிப்பீடு குறித்து கணக்கீடு செய்து வருகின்றனர்.
நகைக்கடையில் நடந்த கொள்ளை சம்பவம் எதிரொலியாக வேலூரில் உள்ள தங்கும் விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். மேலும் கடை ஊழியர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வடமாநில கொள்ளையர்களா?
வேலூரில் சிகிச்சைக்காகவும், வேலைக்காகவும் வட மாநிலங்களில் இருந்து பலர் வந்து தங்கும் விடுதிகளில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி உள்ளனர். கொள்ளை நடந்த நகைக்கடை உள்ள பகுதியில் வெளி மாநிலத்தவர்கள் நடமாட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும்.
எனவே இந்த சம்பவத்தில் வடமாநில கொள்ளையர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது. கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த துணிகர கொள்ளை சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story