அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் குழப்பம் இல்லை அண்ணாமலை பேட்டி


அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் குழப்பம் இல்லை அண்ணாமலை பேட்டி
x
தினத்தந்தி 17 Dec 2021 1:28 AM IST (Updated: 17 Dec 2021 1:28 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் குழப்பம் இல்லை அண்ணாமலை பேட்டி.

நாமக்கல்,

நாமக்கல் பொம்மைகுட்டைமேட்டில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் ஒரே கூட்டணியில் உள்ளன. எங்களுக்கு இடையே கருத்து வேறுபாடு இல்லை. எந்த குழப்பமும் இல்லை. மத்திய அரசு தமிழகத்தில் நன்றாக பணிபுரியும் அரசு அலுவலர்களுக்கு விருது வழங்கி வருகிறது. ஆனால் அமைச்சர்கள் நாங்கள் தான் செய்தோம் என பெருமை பாராட்டி வருகிறார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. மாநில அரசு புதிய திட்டங்களை கண்டுபிடித்து செயல்படுத்தினால் தான் மக்கள் பயன்பெறுவார்கள். ஆனால் தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் எந்தவித மக்கள் நலன் சார்ந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை.

தமிழக அரசு, மத்திய அரசின் திட்டங்களை காப்பி அடித்து செயல்படுத்தி வருகிறது. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வீடுகளில் சோதனை நடத்துவது தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின்னர் கருத்து சொன்னால் தான் சரியாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story