இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 43 தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 43 தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன், அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
சென்னை,
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ராமேஸ்வரம் பகுதியில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இன்று (நேற்று) நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் 6 விசைப்படகுகளில் இருந்த 43 மீனவர்களை சிறைபிடித்து சென்றுள்ளனர். மேலும் அவர்களின் 6 படகுகளையும் பறிமுதல் செய்திருக்கின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இதுபோன்ற அராஜகத்தில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது.
எனவே இனியும் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் நடைபெறக்கூடாது. மத்திய அரசு உடனடியாக இலங்கை அரசுடன் தொடர்பு கொண்டு தற்போது சிறைபிடிக்கப்பட்டுள்ள 43 தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யவும், பறிமுதல் செய்த படகுகளை ஒப்படைக்கவும் வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
அண்மைக்காலங்களில் தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் 43 பேரையும் உடனடியாக விடுதலை செய்யவும், அவர்களின் படகுகளை மீட்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story