இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிடுக்ககோரி ராமேசுவரம் மீனவர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிடுக்ககோரி ராமேசுவரம் மீனவர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் மற்றும் மண்டபம் பகுதியைச் சேர்ந்த 55 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதை தவிர நேற்று முன்தினம் மீன்பிடிக்கச் சென்ற புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 13 பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்தநிலையில் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டுள்ள ராமேசுவரம், மண்டபம் உள்ளிட்ட தமிழக மீனவர்களையும் மற்றும் படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று(புதன்கிழமை) தங்கச்சிமடம் வலசை பஸ் நிறுத்தம் எதிரே அனைத்து விசைப்படகு மீனவர்கள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகின்றது.
இதனிடையே மீனவர்கள் மற்றும் படகுகளை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளதை தொடர்ந்து 2-வது நாளாக 800-க்கும் அதிகமான விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் துறைமுகத்தில் அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதேபோல மீனவர்களை விடுவிக்க கோரி ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

Related Tags :
Next Story