விஷால் பிலிம் பேக்டரி ஊழியர் மீது மோசடி புகார் - 6 மாதத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு
விஷால் பிலிம் பேக்டரி ஊழியர் மீதான மோசடி புகாரில் போலீசார் 6 மாதத்தில் இறுதி தாக்கல் செய்ய வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
விஷால் பிலிம் பேக்டரியில் பணிபுரிந்த பெண் கணக்காளர் ரம்யா, ஊழியர்கள் ஊதியத்திற்கான வருமானவரித் தொகையான 45 லட்சம் ரூபாயை வரித்துறைக்கு செலுத்திவிட்டதாக கூறி போலி ஆவணங்களை தயாரித்ததாகவும், அந்த தொகையை தனது உறவினர்களின் வங்கி கணக்கில் செலுத்தி மோசடி செய்ததாகவும் நிறுவனத்தின் மேலாளர் விருகம்பாக்கத்தில் புகார் அளித்தார்.
அதன் மீது கடந்த 2020 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்த போலீசார், இறுதி அறிக்கையை தாக்கல் செய்யவில்லை என்றும் ஐகோர்ட்டில் மனு அளிக்கப்பட்டது. மேலும் மோசடி வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் போலீசாருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 6 மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார். அதனை ஏற்ற போலீசார் இந்த வழக்கு தொடர்பாக 6 மாதத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story