தமிழகத்தில் இன்று 607 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி


தமிழகத்தில் இன்று 607 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
x
தினத்தந்தி 23 Dec 2021 7:36 PM IST (Updated: 23 Dec 2021 7:36 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் தற்போது 6,889 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை,

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 1,03,938 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 607 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 27,42,224 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 689 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,98,628 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் இன்று 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 36,707 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 6,889 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story