ஆயுள் தண்டனை கைதிகள் முன் விடுதலை குறித்து பரிந்துரை: ஓய்வுபெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் 6 பேர் குழு
ஆயுள் தண்டனை கைதிகள் முன் விடுதலை குறித்து பரிந்துரை: ஓய்வுபெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் 6 பேர் குழு மு.க.ஸ்டாலின் உத்தரவு.
சென்னை,
அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக சிறைகளில் 10 ஆண்டுகள் மற்றும் 20 ஆண்டுகள் தண்டனை முடிந்தும், இதன் கீழ் பயன் பெற முடியாத ஆயுள் தண்டனை சிறைவாசிகள் மற்றும் வயது முதிர்ந்த மற்றும் உடல்நலம், மனநலம் குன்றிய சிறைவாசிகள், மாற்றுத்திறனாளி சிறைவாசிகள் ஆகியோர் நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையிலும், நடைமுறையில் உள்ள சட்டம் மற்றும் விதிகளின் அடிப்படையில் அவர்களை முன் விடுதலைக்கு உரிய பரிந்துரைக்க சென்னை ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி என்.ஆதிநாதன் தலைமையின் கீழ் 6 பேர் அடங்கிய ஒரு குழு அமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்த குழுவில், மனநல மருத்துவ இயக்குனர், மருத்துவக்கல்வி இயக்குனர், சிறைத்துறைத் தலைமை நன்னடத்தை அலுவலர், உளவியலாளர், குற்றவியல் நடைமுறைச்சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற மூத்த வக்கீல் என 5 உறுப்பினர்களும், சிறை மற்றும் சீர்திருத்தத்துறையில் துணைத்தலைவர் பதவி நிலையில் உள்ள அலுவலர் ஒருவர் உறுப்பினர் செயலராகவும் அங்கம் வகிப்பார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story