சூரப்பா விவகாரத்தில் தமிழக அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
சூரப்பா விவகாரத்தில் தமிழக அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பான விசாரணை அறிக்கையின் அடிப்படையில் முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீது கவர்னர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு கூறியிருப்பது ஏமாற்றமளிக்கிறது.
பல்கலைக்கழகங்களின் வேந்தர் கவர்னர்தான் என்றாலும் கூட, அது ஒரு கவுரவ பதவிதானே தவிர அதிகாரம் பெற்ற பதவி அல்ல. பல்கலைக்கழகங்கள் மீதான அரசின் உரிமைகளை கவர்னர் மாளிக்கைக்கு தாரை வார்க்கக்கூடாது. அது மாநில சுயாட்சிக்கு எதிரான நிலைப்பாடாக அமைந்து விடும்.
கடந்த காலங்களில் முறைகேடு செய்த துணைவேந்தர்கள் மீது அரசுதான் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கு கவர்னரின் ஒப்புதல்தான் பெறப்பட்டுள்ளதே தவிர, கவர்னரே நேரடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. சூரப்பா விவகாரத்திலும் அதே நடைமுறையையே பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story