உடற்பயிற்சி செய்யும் முதல்-அமைச்சர் - புதிய வீடியோ வைரல்


உடற்பயிற்சி செய்யும் முதல்-அமைச்சர் - புதிய வீடியோ வைரல்
x
தினத்தந்தி 26 Dec 2021 2:27 PM IST (Updated: 26 Dec 2021 2:27 PM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடற்பயிற்சி செய்யும் புதிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை,

உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து மக்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தினமும் தவறாமல் நேரம் ஒதுக்கி உடற்பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அவர் உடற்பயிற்சி செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் அடிக்கடி வெளியாகும். 

அந்த வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடற்பயிற்சி செய்வது தொடர்பான புதிய வீடியோவை, திமுக மாநிலங்களவை எம்.பி. வில்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. 

Next Story