விடுமுறையில், வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை: மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் எச்சரிக்கை
கல்வித்துறை அறிவிப்பை மீறி விடுமுறையில், வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டும் என்று மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை,
இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்ட நிலையில், அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படாது என்று கல்வித்துறை அறிவித்தது.
அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படாததால், ஒவ்வொரு ஆண்டும் விடப்படும் அரையாண்டு விடுமுறையும் இருக்காது என்று பரவலாக பேசப்பட்டது. இந்தநிலையில் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விடுமுறை உண்டு என்று அறிவிப்பை வெளியிட்டார்.
அந்த அறிவிப்பை தொடர்ந்து, கல்வித்துறை சார்பில் ஒரு அறிவிப்பும் வெளியிடப்பட்டது. அதில் 31-ந்தேதி வரை விடுமுறை விடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கல்வித் துறையின் அறிவிப்பை மீறி சில தனியார் பள்ளிகள் வகுப்புகள் நடத்துவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில், ‘31-ந்தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பை மீறும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story