கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வுக்கான இடங்களை அளவிடும் பணி தீவிரம்


கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வுக்கான இடங்களை அளவிடும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 22 Jan 2022 6:45 PM IST (Updated: 22 Jan 2022 6:45 PM IST)
t-max-icont-min-icon

கீழடியில் இதுவரை நடந்த 7 கட்ட அகழாய்வு பணிகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழடியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை மத்திய, மாநில அரசுகளின் தொல்லியல் துறை சார்பில் 7 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்தன. இதில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

கீழடி மட்டுமின்றி அதன் அருகே உள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளிலும் அகழாய்வு நடந்தன. இதுவரை நடந்த அகழாய்வுகளில் பாசி மணிகள், தாயக்கட்டை, காதில் அணியும் தங்க ஆபரணம், முதுமக்கள் தாழி, மனித மண்டை ஓடு, இரும்பாலான கத்தி, ஆணிகள், சுடுமண் முத்திரைகள், எடைக்கற்கள், சுடுமண் சக்கரம், சங்கு வளையள்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளன.

இதனை தொடர்ந்து கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வு பணி இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்கி செப்டம்பர் மாதம் முடிவடையும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அகழாய்வு பணிகள் தொடங்குவதற்கு இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில், கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வு பணிகளுக்காக தொல்லியல் துறையினர் தேர்வு செய்து கொடுத்த இடங்களை அளவிட்டு வரையறை செய்யும் பணி இன்று நடைபெற்றது. இந்த பணிகளை வருவாய்த்துறை சார்பில் அதிகாரிகள் மேற்கொண்டனர். 
1 More update

Next Story