திமுக 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு


திமுக 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 1 Feb 2022 3:57 PM IST (Updated: 1 Feb 2022 3:57 PM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 19-ம் தேதி நடக்க இருக்கிறது. வேட்புமனு தாக்கல் ஜனவரி 30 தொடங்கி, வரும் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிப்ரவரி 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதில் அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை பல்வேறு கட்டஙளாக வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நகர்ப்புற வேட்பாளர் பட்டியலுக்கான 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டார். அதில் சென்னை மாநகராட்சியில் 156 முதல் 167 வரை 11 வார்டுகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் தாம்பரம், திருச்சி, சேலம் மாநகராட்சிகளின் வார்டுகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

அதே போல செங்கல்பட்டு, திருவண்ணாமலை, தென்காசி, சங்கரன்கோவில், லால்குடி, துவாக்குடி, துறையூர், முசிறி, மணப்பாறை, ஆரணி, வந்தவாசி, மறைமலைநகர், குன்றத்தூர், மாங்காடு, நந்திவரம்(கூடுவாஞ்சேரி) ஆகிய நகராட்சிகள் மற்றும் திருப்போரூர், மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பேரூராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை திமுக தலைமை வெளியிட்டுள்ளது. 

Next Story