கச்சத்தீவு தேவாலய பெருவிழாவில் தமிழக மீனவர்கள் தடையின்றி பங்கேற்க இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்திரப் பெருவிழாவில் தமிழக மீனவர்கள் தடையின்றி பங்கேற்க வழிவகை செய்ய இலங்கை அரசை வலியுறுத்தக் கோரி மத்திய வெளியுறவுத் துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை,
இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்தில், புனித அந்தோணியார் வருடாந்திரப் பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் பங்கேற்க விரும்பும் தமிழக மீனவ பக்தர்களின் பாதுகாப்பான பயணத்திற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்து வருகிறது.
பல்வேறு காரணங்களை முன்வைத்து இந்த ஆண்டு திருவிழாவில் தமிழக மீனவ பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று இலங்கை அதிகாரிகள் தெரிவித்திருப்பது எனது கவனத்திற்கு வந்துள்ளது. தமிழக மீனவர்கள் மற்றும் பக்தர்கள் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்துடன் ஆன்மீக மற்றும் உணர்வுபூர்வமான தொடர்பை பல ஆண்டுகளாகக் கொண்டுள்ளனர்.
தடையின்றி பங்கேற்க நடவடிக்கை
ஆனால் கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க இலங்கை அதிகாரிகளால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழக மீனவர்களிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரியமாக புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்திரப் பெருவிழாவில் தமிழக மீனவர்கள் தடையின்றி பங்கேற்பதை உறுதி செய்யும்படி இலங்கை அரசை நீங்கள் வலியுறுத்த வேண்டும்.
இம்முயற்சி இரு நாட்டு மக்களிடையே நல்லுறவைப் பேணுவதை உறுதி செய்யும் என்று நான் நம்புகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரிடம் தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு நேரில் சந்தித்து வழங்கினார்.

Related Tags :
Next Story