நாடாளுமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க., பா.ஜனதா கட்சிகள் தனித்து நிற்குமா? சீமான் கேள்வி
நாடாளுமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க., பா.ஜனதா கட்சிகள் தனித்து நிற்குமா? சீமான் கேள்வி.
சிவகங்கை,
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசார கூட்டம் சிவகங்கையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இதுவரை நடந்த எல்லா தேர்தலிலுமே நாங்கள் தனித்துதான் போட்டியிட்டு உள்ளோம். மாற்றம் வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர். மாற்றம் வேண்டும் என்றால், அதுவும் எதிலிருந்து மாற்றம் என்றால், தமிழகத்தில் உள்ள 2 கட்சிகளின் அரசியலில் இருந்தும் மாற்றம் வேண்டும்.
இந்தியாவில் காங்கிரஸ், பாரதீய ஜனதா என 2 கட்சிகளும் வெவ்வேறாகத்தான் உள்ளன. ஆனால் கொள்கை ஒன்றாகத்தான் உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும் அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் 2024-ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நிற்குமா?
அதேசமயம் பா.ஜ.க தனித்து நின்று எங்கள் கட்சியை விட கூடுதல் ஓட்டுக்களை பெற முடியுமா? உள்ளாட்சி தேர்தல் என்பது எம்.எல்.ஏ., எம்.பி. தேர்தலை விட மிக சக்தி வாய்ந்தது. இந்த தேர்தலில் தான் அதிக அளவில் பணப்புழக்கம் இருக்கும். அதனால்தான் கொலைகள், கடத்தல், பணபேரம் ஆகியவை நடைபெறுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story