நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க மும்பையில் இருந்த விமானத்தில் கோவை வந்த பெண்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதற்காக மும்பையில் இருந்த விமானம் மூலம் பெண் கோவைக்கு வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
கோவை,
கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றது. பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
இந்த வகையில் கோவை புலியகுளம் பகுதியை சேர்ந்த ஆண்டனி ரோசல் என்பவர் மும்பையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார்.
இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதற்காக அண்டனி ரோசல் மும்பையில் இருந்து விமான மூலம் இன்று கோவை வந்தார்.
அவர், ரேஸ்கோர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடிக்கு தனது குழந்தையுடன் சென்று வாக்குப்பதிவு செய்துள்ளார்.
Related Tags :
Next Story






