நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் : விஜய் மக்கள் இயக்கம் 3 இடங்களில் வெற்றி..!


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்  முடிவுகள் : விஜய் மக்கள் இயக்கம் 3 இடங்களில் வெற்றி..!
x
தினத்தந்தி 22 Feb 2022 5:40 AM GMT (Updated: 22 Feb 2022 6:04 AM GMT)

வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது .


தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19-ந் தேதி நடைபெற்றது.

21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடந்தது.

இந்த தேர்தலில் 61 சதவீத வாக்குகள் பதிவானது மாநகராட்சி பகுதியில் 1,369 வார்டுகள், நகராட்சி பகுதியில் 3,824 வார்டுகள், பேரூராட்சி பகுதியில் 7,408 வார்டுகள் என மொத்தம் 12,601 வார்டுகளுக்கு  இந்த தேர்தல் நடந்தது.

 வாக்கு எண்ணிக்கை  இன்று காலை  8 மணிக்கு தொடங்கி  நடைபெற்று வருகிறது .

இந்நிலையில் இந்த தேர்தலில் முதன் முதலில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கம்  இதுவரை 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது  

புதுக்கோட்டை நகராட்சி 4வது வார்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட பர்வேஸ் ,.ராணிப்பேட்டை வாலாஜாபேட்டை நகராட்சி 
3வது வார்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட மோகன் ராஜ் ,.குமாரபாளையம் நகராட்சியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட வேல்முருகன், ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர் 

Next Story