தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்


தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 25 Feb 2022 12:16 AM IST (Updated: 25 Feb 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ராஜஸ்தான் மாநில சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்து பேசிய அம்மாநில முதல்-மந்திரி, 2004-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி மற்றும் அதற்குப் பிறகு பணியில் சேர்ந்த அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார். இதன்மூலம் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்திய முதல் மாநிலம் என்ற பெயரை ராஜஸ்தான் பெற்றுள்ளது.

புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் கிடையாது. தமிழகத்திலும் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட வேண்டும். இதற்கான அறிவிப்பை பட்ஜெட் கூட்டத்தில் வெளியிட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், இனியும் அரசு ஊழியர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கக் கூடாது. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தவாறு பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story