10,11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை: நாளை வெளியிடுகிறார் அமைச்சர் அன்பில் மகேஷ்...!
10,11,12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணை குறித்த அறிவிப்பை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நாளை வெளியிடுகிறார்.
சென்னை,
கொரோனா தொற்றால் கடந்த ஜனவரி மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் தற்போது வைரஸ் பரவல் குறைந்துள்ளதால் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வும் நடைபெற்று முடிந்துள்ளது.
இதனிடையே நடப்பு கல்வி ஆண்டில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.
அதன்படி,10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை குறித்த அறிவிப்பு நாளை வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிடவுள்ளார்.
Related Tags :
Next Story