வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து காண்டிராக்டர் வீட்டில் 225 பவுன் நகை கொள்ளை
வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து காண்டிராக்டர் வீட்டில் 225 பவுன் நகை, ரூ.2½ லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த வெள்ளக்குளம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 38), சாலை காண்டிராக்டர். அ.தி.மு.க.வை சேர்ந்தவர். நேற்று முன்தினம் இரவு பாலமுருகன் தனது குடும்பத்தினருடன் தூங்கிக்கொண்டிருந்தார். நேற்று அதிகாலை 5½ மணி அளவில் அவரது வீட்டின் வெளியே கார் ஒன்று வந்து நின்றது. அந்த காரில் இருந்து ஒரு பெண், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் போல் உடை அணிந்த ஒருவர் மற்றும் டிப்-டாப் சபாரி உடை அணிந்த 5 பேர் என மொத்தம் 7 பேர் திடீரென பாலமுருகன் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றனர்.
அப்போது அவர்கள் அங்கு இருந்த பாலமுருகனிடம் தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என்று கூறி அறிமுகம் செய்து கொண்டு அதற்கான அடையாள அட்டையையும் காண்பித்தனர்.
இதை உண்மை என்று நம்பிய பாலமுருகன் அவர்களை அமரவைத்தார். உடனடியாக அவர்கள் பாலமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் இருந்த செல்போன்கள் அனைத்தையும் வாங்கி வைத்து கொண்டனர். பின்னர் அவர்கள், பாலமுருகன் தற்போது செங்கல் சூளை ஒன்றை வாங்கி உள்ளதாகவும், எந்த அடிப்படையில் அவர் அந்த செங்கல் சூளையை வாங்கினார் என்ற விவரங்களையும் கேட்டனர்.
225 பவுன் நகை கொள்ளை
மேலும் அது தொடர்பான பத்திரங்களை கொண்டு வருமாறு கேட்டனர். மேலும் அவர் சரியான முறையில் வருமான வரி செலுத்தவில்லை என கூறி அவரிடம் கிடுக்கிப்பிடி கேள்வியை கேட்டு அவரை மிரட்டியுள்ளனர். பின்னர் வீட்டில் உள்ள நகை மற்றும் பணத்தை கொண்டு வந்து தங்களிடம் காண்பித்து அதற்கான வருமான விவரங்களை காண்பிக்குமாறும் கூறினர். இதை உண்மை என்று நம்பிய பாலமுருகன் தன் வீட்டில் இருந்த தங்க வளையல், தங்கச்சங்கிலி, மூக்குத்தி, கம்மல், ஒட்டியாணம், ஆரம், பிரேஸ்லெட் என 225 பவுன் தங்க நகைகளையும், ரூ.2½ லட்சம் மற்றும் வீட்டில் உள்ள மற்ற பத்திரப்பதிவு ஆவணங்களையும் அவர்களிடம் காண்பித்தார். அதை வாங்கிய அவர்கள் உடனடியாக ஒரு பெரிய பெட்டியில் போட்டு மூடி வைத்தனர்.
மேற்கண்ட ரொக்கப்பணம் மற்றும் நகைகளுக்கான உரிய விவரங்களை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்கு வந்து கொடுத்துவிட்டு நகை, பணத்தை பெற்று செல்லுமாறு கூறி விட்டு புறப்பட தயாரானார்கள். ஆனால் அவர்கள் கைப்பற்றிய ரொக்கப்பணம் மற்றும் தங்க நகைகள் எடுத்து செல்வதற்கான எந்த ஒரு ரசீதும் கொடுக்கவில்லை. மாறாக அவர்கள் ஒரு செல்போன் எண்ணை கொடுத்துவிட்டு அந்த எண்ணில் தொடர்பு கொண்டு பொருட்களை பெற்று செல்லுமாறு கூறிவிட்டு காலை 6½ மணி அளவில் அதே காரில் புறப்பட்டு சென்றனர். அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் பாலமுருகன் அவர்கள் கொடுத்த செல்போன் எண்ணுக்கு போன் செய்து பார்த்தார். அந்த எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி் அடைந்த பாலமுருகன் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து மன வேதனை அடைந்தார்.
வருமான வரித்துறைஅதிகாரிகள் போல் நடித்து
பின்னர் அவர் உடனடியாக இது சம்பந்தமாக செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு ஆவடி காவல் துணை ஆணையர் மகேஷ், உதவி ஆணையர் முத்துவேல் பாண்டி, இன்ஸ்பெக்டர் டில்லி பாபு மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த வீட்டில் தடயங்களை சேகரித்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் பாலமுருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து சினிமா பாணியில் காரில் வந்த மர்ம கும்பல் நூதன முறையில் கைவரிசை காட்டி நகை, பணத்தை அள்ளி சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பாலமுருகன் வீட்டின் வெளிப்பகுதி மற்றும் அக்கம் பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்களின் உருவங்கள் பதிவாகி உள்ளதா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் கூறப்பட்டது.

Related Tags :
Next Story