இலங்கைக்கு 450 கிலோ கஞ்சா, மஞ்சள் கடத்த முயற்சி - 7 பேர் கைது
இலங்கைக்கு கஞ்சா, மஞ்சள், ஏலக்காய் உள்ளிட்டவற்றை படகில் கடத்த முயன்றவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி அருகே உள்ள வெள்ளப்பட்டி கடற்கரையில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக ‘கியூ’ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த ‘கியூ’ பிரிவு போலீசார் படகை மடக்கிப்பிடித்து சோதனையிட்டனர்.
அப்போது படகில் இருந்த 450 கிலோ கஞ்சா, மஞ்சள், பீடி இலை உள்ளிட்டவற்றை மூட்டை, மூட்டையாக பறிமுதல் செய்தனர். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வேன், 3 இருசக்கர வாகனங்கள் மற்றும் 9 செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக 7 பேரை கைது செய்து ‘கியூ’ பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல் தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே கடற்கரையில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டிருந்த 2 படகுகளில், கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 550 கிலோ ஏலக்காய் மற்றும் படகுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
Related Tags :
Next Story