சென்னை விமான நிலையத்தில் ரூ.19 லட்சம் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் கொழும்பில் இருந்து காலணியில் மறைத்து கடத்தி வந்த ரூ.18 லட்சத்து 84 ஆயிரம் மதிப்புள்ள 393 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு கொழும்பில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சென்னையை சேர்ந்த 25 வயது பெண், வெளியில் நடந்து சென்றபோது நடை சற்று வித்தியாசமாக இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள் அவரை நிறுத்தி விசாரித்தனர்.
ரூ.19 லட்சம் தங்கம்
அவர் அணிந்து இருந்த காலணியை கழற்றி சோதனை செய்தனர். அதில் அவர், தங்கத்தை சிறு துண்டுகளாக மாற்றி காலணியின் அடிப்பாகத்தில் மறைத்து நூதன முறையில் கடத்தி வந்தது தெரிந்தது.
அவரிடம் இருந்து ரூ.18 லட்சத்து 84 ஆயிரம் மதிப்புள்ள 393 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக பெண் பயணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story