“முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு அறநிலையத்துறைக்கு பொற்காலம்” - அமைச்சர் சேகர்பாபு
முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு அறநிலையத்துறையின் காலம் பொற்காலமாக மாறியுள்ளது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை வடபழனி முருகன் கோவிலில் இன்று, மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச திருமண திட்டத்தின்படி மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சட்டமன்றத்தில் அறிவித்தபடி மாற்றுத்திறனாளிகளுக்கு கோவில்களில் இலவசமாக திருமணம் நடத்தப்படுவதாக தெரிவித்தார். தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, இந்து சமய அறநிலையத்துறையின் காலம் பொற்காலமாக மாறியுள்ளது என்று பெருமிதம் தெரிவித்தார்.
Related Tags :
Next Story