மாபெரும் புத்தக பூங்கா அமைக்கப்படும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
அனைத்து நூல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் நோக்கத்தில் மாபெரும் புத்தகப் பூங்கா அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை,
தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழறிஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழா, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு:-
தமிழ் மொழிக்கும் இனத்துக்கும் பெருமை சேர்க்கக் கூடிய பெருமக்களின் பெயரால் அமைந்துள்ள விருதுகளை, அதே புகழும் பெயரும் அறிவும் ஆற்றலும் கொண்டிருக்கக்கூடிய பெருமக்களுக்கு வழங்குவதை தமிழ்நாடு அரசு பெருமையாகக் கருதுகிறது. இந்த விருது பெருமை அடைகிறது. எனது கையால் வழங்கியதன் மூலமாக நானும் பெருமைப்படுகிறேன். நான் எனது தமிழ்க் கடமையைச் சரியாகச் செய்து விட்டதாக நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழாட்சி
யாருடைய பெயரால் விருதுகள் உள்ளதோ, அவர்கள் வாழ்ந்த காலத்தில் எத்தகைய அங்கீகாரத்தை பெறத் தவறினார்களோ, அது போன்ற சூழல் இனி வருங்காலத்தில் இருக்கக் கூடாது என்பதை இன்றைய தமிழக அரசு தனது கொள்கையாக வைத்துள்ளது. அதனால்தான் தி.மு.க. ஆட்சியை தமிழாட்சியாக, தமிழின ஆட்சியாக நடத்தி வருகிறோம்.
தலையாய தொண்டு
தமிழ் மொழிக்கு செம்மொழி என்ற அந்த அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது, தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது தி.மு.க. அரசு. தமிழர்கள் கல்வியில், வேலை வாய்ப்பில், அதிகாரம் பொருந்திய அனைத்து இடங்களிலும் போய் அமர சமூகநீதியை உருவாக்கிக் கொடுத்தது திராவிட இயக்கம். தமிழ் மொழிக்கு, தமிழ் இனத்துக்கு, தமிழ்நாட்டுக்கு தலையாய தொண்டு செய்த இயக்கம் தி.மு.க.வாகும்.
கடந்த 10 மாத காலத்தில் பைந்தமிழுக்கு பல்வேறு சாதனைகளை இந்த அரசு செய்துள்ளது.
புத்தக பூங்கா
2010-ம் ஆண்டு முதல் வழங்கப்படாமலிருந்த முத்தமிழறிஞர் கலைஞர் செம்மொழித் தமிழ் விருதுகள் 22.1.2022 அன்று வழங்கப்பட்டன. இனி ஒவ்வொரு ஆண்டும் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் மாதம் 3-ந் தேதி ரூ.10 லட்சம் பரிசுத்தொகையுடன் விருதுகள் வழங்கப்படும்.
புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தபோது உள்ளாட்சி தேர்தல் காலம் என்பதால் ஒரு அறிவிப்பை வெளியிட முடியவில்லை. அதை இப்போது அறிவிக்கிறேன். அனைத்து நூல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக மாபெரும் புத்தகப் பூங்கா அமைக்கலாம் என்றும், அதற்கான நிலத்தை அரசு வழங்கும் என்றும் கருணாநிதி ஒருமுறை சொன்னார். அதற்கு புத்தகப் பூங்கா என்றும் அவரே பெயர் சூட்டினார்.
பாபசி அமைப்பின் ஆலோசனைகளைப் பெற்று நிலத்தைத் தேர்வு செய்து, அதை அரசு வழங்கும். இந்த புத்தகப் பூங்கா உருவானால், அனைத்து புத்தகங்களையும் ஒரே இடத்தில் வாங்கலாம். அனைத்துப் பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் ஒரே இடத்தில் சந்திக்கக்கூடிய சூழல் நிச்சயம் உருவாகும். அதனை உருவாக்கித் தர அரசு தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் உறுதியாகச் செய்யும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story