கவர்னர் ஆர்.என்.ரவியுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
கவர்னர் ஆர்.என்.ரவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, ‘நீட்' தேர்வு விலக்கு மசோதாவை ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்ப வலியுறுத்தினார்.
சென்னை,
‘நீட்' தேர்வு விலக்கு தொடர்பான தமிழ்நாடு இளங்கலை மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை சட்டம்-2021, தமிழ்நாடு சட்டசபையில் 13-9-2021 அன்று அனைத்து அரசியல் கட்சிகளாலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், 142 நாட்களுக்குப் பிறகு, கவர்னரால் திருப்பி அனுப்பப்பட்டது.
அதன் பின்னர், தமிழ்நாடு சட்டமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்கக் கூட்டத்தில், இந்த சட்டமுன்வடிவு மீண்டும் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக கவர்னருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.
கவர்னருடன் சந்திப்பு
2021-2022-ம் கல்வி ஆண்டு முடிவுக்கு வந்து, 2022-2023-ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைமுறை விரைவில் தொடங்க உள்ள நிலையில், 'நீட்' தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டமுன்வடிவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு விரைந்து அனுப்பிடவேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
மேலும், இதேபோன்று பல மாதங்களாக நிலுவையில் இருக்கும் சட்டமுன்வடிவுகள் மற்றும் கோப்புகள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதன் மூலம், தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பைக் காப்பதுடன், தமிழக மக்களின் உணர்வுகளை மதிப்பதாகவும் அமைந்திடும் என தமிழக கவர்னரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டி வலியுறுத்தினார்.
கவர்னர் உறுதி
இந்த சந்திப்பின் இறுதியில், கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டுக்கு ‘நீட்' தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரும் மசோதாவை ஜனாதிபதிக்கு விரைவில் அனுப்பி வைப்பதாக உறுதியளித்தார்.
கவர்னருடனான இந்த சந்திப்பின்போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு மற்றும் உயரதிகாரிகள் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story