முறைகேடாக தனியார் நிறுவனத்துக்கு ரூ.4,442 கோடி மின்வாரிய திட்டம் ஒதுக்கீடு - அண்ணாமலை குற்றச்சாட்டு
தனியார் நிறுவனத்துக்கு முறைகேடாக ரூ.4 ஆயிரத்து 442 கோடி மதிப்புள்ள திட்டத்தை மின்சார வாரியம் ஒதுக்கீடு செய்துள்ளதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை,
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மின்சார வாரியம் எண்ணூர் அனல் மின்நிலையத்தில் ரூ.4,442 கோடி மதிப்பிலான மின் திட்டத்தை தனியார் நிறுவனத்துக்கு கொடுத்தது. ஆனால் அந்த நிறுவனம் ரூ.440 கோடி வங்கி உத்தரவாதம் கொடுக்க முடியாததால் அந்த திட்டத்தை ஒதுக்கீடு செய்ததை மின்வாரியம் ரத்து செய்தது. குறிப்பிட்ட நிறுவனம் நஷ்டத்தில் இயங்க கூடிய நிறுவனமாகும். எந்த சொத்தும் இல்லாத நிறுவனம். கடந்த 5 ஆண்டுகளாக ஒரு காலாண்டில் கூட லாபம் ஈட்டவில்லை.
2021-ம் ஆண்டு 3-ம் காலாண்டில் மட்டும் அந்த நிறுவனம் தங்களுடைய நிறுவனத்துக்கு பணம் பெறுவதற்கான வழியை கூறவில்லை. யாரோ ஒருவர் அந்த நிறுவனத்துக்கு பணத்தை முறைகேடாக முதலீடு செய்துள்ளார். அந்த பணத்தை வைத்து வங்கி உத்தரவாதம் கொடுத்ததை போன்று நடித்துள்ளதை தொடர்ந்து, வரம்பை மீறி விதிகளை மீறி அந்த நிறுவனத்துக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது.
முறைகேடு
தி.மு.க. குடும்ப நிறுவனமான தனியார் நிறுவனத்துக்கு ரூ.4,442 கோடி மதிப்பிலான மின்சார வாரிய திட்டத்தை கடந்த 10-ம் தேதி வழங்கியுள்ளனர். அந்த நிறுவனம், வெறும் காகிதத்தில் இருக்கக்கூடிய நிறுவனமே. இதற்கு முன்பு தி.மு.க. ஆட்சியிலும் மேட்டூர் அனல் மின் நிலைய திட்ட ஒப்பந்தம் அந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. கணக்கு தணிக்கை துறை ஆய்வு செய்ததில் அந்த நிறுவனத்தினால் ரூ.72 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அனல் மின் நிலைய 2-வது திட்டத்தில் அந்த நிறுவனத்திடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 878 கோடி நஷ்ட ஈடு வசூல் செய்யவேண்டும் என்று கணக்கு தணிக்கை துறை கூறியிருக்கிறது.
இந்த நிறுவனத்துக்கு தான் தற்போது, ரூ.4 ஆயிரத்து 442 கோடி மதிப்பிலான திட்டத்தை முறைகேடாக ஒதுக்கீடு செய்துள்ளனர். முந்தைய ஆண்டுகளில் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் நிராகரிக்கப்பட்ட பட்டியலில் வைக்கப்பட்ட தனியார் நிறுவனம், திடீரென புனிதமானது எப்படி? இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு விளக்கவேண்டும். இந்த முறைகேடுகளை முறியடிக்கும் வரை தொடர்ந்து பா.ஜ.க. போராடும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story