‘நீட் தேர்வில் இருந்து நாடு விரைவில் விடுதலை பெறும்’ முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
‘நீட் தேர்வில் இருந்து நாடு நிச்சயம் விடுதலை பெறும்’ என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக கே.என்.நேரு இல்ல திருமண விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை,
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரான மறைந்த கே.என்.ராமஜெயம்-லதா தம்பதியினரின் மகன் ஆர்.விநீத் நந்தனுக்கும், கே.சீனிவாசன்-எஸ்.கிருஷ்ணகுமாரி தம்பதியினரின் மகள் எஸ்.அக்ஷயா கவுசிக்குக்கும் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமசந்திரா கன்வென்ஷன் ஹாலில் திருமணம் நடந்தது.
இந்த விழாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். அப்போது மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினும் உடன் இருந்தார். இருவரும் மணமக்களை ஆசீர்வதித்து வாழ்த்தினர். அதனைத்தொடர்ந்து நடந்த திருமண நிகழ்ச்சியில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. வரவேற்புரையாற்றினார்.
மணமக்களுக்கு வாழ்த்து
விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், க.பொன்முடி, மா.சுப்பிரமணியன், ராஜகண்ணப்பன், தா.மோ.அன்பரசன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் டி.கே.ரெங்கராஜன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, எம்.ஜி.ஆர். கழகத்தின் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், சு.திருநாவுக்கரசர், ஆ.ராசா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ., பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் உள்பட பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
நிகழ்ச்சியின் இறுதியில் அமைச்சர் கே.என்.நேரு நன்றி கூறினார். முன்னதாக திருமணத்துக்கு வந்திருந்தவர்களை கே.என்.நேருவின் மனைவி சாந்தா, மகன் கே.என்.என்.அருண், நேருவின் சகோதரர்கள் கே.என்.ரவிச்சந்திரன், கே.என்.மணிவண்ணன் ஆகியோர் வரவேற்றனர்.
கட்சியின் வளர்ச்சிக்காக உழைத்தவர்கள்...
திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
திருச்சியில் நம்முடைய ராமஜெயத்தோடு நெருக்கமாக இருந்தவர்கள், அவரை “எம்.டி., எம்.டி.” என்றுதான் அழைப்பார்கள். ‘எம்.டி.’ என்பது ‘மேனேஜிங் டைரக்டர்' மட்டுமல்ல, அனைவரையும் வசப்படுத்தும் ‘மேக்னடிக் டைரக்டராகவும்' அவர் விளங்கியிருக்கிறார்.
அண்ணன் நேரு கிழித்த கோட்டை ராமஜெயம் தாண்டமாட்டார். அவர் சொல்லுக்கு கட்டுப்பட்ட ஒரு தம்பியாக விளங்கியவர். நேருவாக இருந்தாலும் சரி, ராமஜெயமாக இருந்தாலும் சரி, தம்பி ரவியாக இருந்தாலும் சரி கட்சிக்காக உழைப்பதில் எதையும் எதிர்நோக்கி அவர்கள் உழைத்ததில்லை. கட்சியின் வளர்ச்சிக்காக, தலைவருடைய புகழுக்காக உழைத்தவர்கள்; இன்றைக்கும் உழைத்துக்கொண்டிருப்பவர்கள்.
ராமஜெயத்தை நாம் இழந்தபோது, நேருவும், அவருடைய குடும்பத்தினரும் அடைந்த துன்பம்போலதான், நம்முடைய தலைவரும் கண்ணீர்விட்டு அழுதார்கள்; கவலைப்பட்டார்கள். சிலையாய் அல்ல; புகழ் மலையாய் ராமஜெயத்தின் புகழும் சேர்ந்து விநீத் நந்தன்-அக்ஷயா கவுசிக் இருவரையும் இன்றைக்கு வாழ்த்திக்கொண்டிருக்கிறது.
‘நீட்’ தேர்வில் இருந்து விடுதலை
நீட் தேர்வில் முதல்கட்டமாக வெற்றிச்செய்தி கிடைத்திருப்பது பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஏழை-எளிய, நடுத்தர மாணவர்களின் கல்விக்கனவை சிதைக்கும் நீட் தேர்விற்கு விலக்குபெற சட்டமன்றத்தை கூட்டி மீண்டும் ஒரு தீர்மானத்தைப்போட்டு, மீண்டும் கவர்னருக்கு அனுப்பிவைத்தோம். இது நேற்று வரையில் (நேற்று முன்தினம்) எங்களுக்கு என்ன நிலையில் இருக்கிறது? என்ற செய்தி கிடைக்கவில்லை. அதனால் நேற்றைய தினம் (நேற்று முன்தினம்) நான், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தலைமைச்செயலாளர் மற்றும் அதிகாரிகள் எல்லாம் கவர்னரை சந்தித்து அந்த கோப்பை பற்றி விசாரித்தோம்.
விசாரித்தபோது கவர்னர், ‘எனக்கும் சட்டம் தெரியும்; 2-வது முறை நான் அதைத்திருப்பி உங்களுக்கு அனுப்பமுடியாது. நான் ஜனாதிபதிக்குத்தான் அனுப்பிவைக்கவேண்டும். வேறுவழி கிடையாது’ என்றார். எனவே முதற்படியில் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். இன்றைக்கும் சொல்கிறேன், விரைவில் அந்த ‘நீட்' தேர்வில் இருந்து இந்த நாடு நிச்சயம் விடுதலைபெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நேற்றைக்கு கூட (நேற்று முன்தினம்) நாடாளுமன்றத்தில் நம்முடைய நாடாளுமன்ற குழுவின் தலைவர் டி.ஆர்.பாலு இதுபற்றி விளக்கமாக, விரிவாக பேசி, அங்கிருக்கும் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். அது இன்றைக்கு பத்திரிகைகளில் செய்திகளாக வந்திருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story