தமிழகத்தில் 61 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் நேற்று 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை.
சென்னை,
தமிழகத்தில் நேற்றைய கொரோனா தொற்று குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் நேற்று புதிதாக 38 ஆயிரத்து 458 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆண்கள் 29 பேரும், பெண்கள் 32 பேரும் உள்பட மொத்தம் 61 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் 19 பேரும், செங்கல்பட்டில் 9 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறைந்தபட்சமாக கோவை, திருவள்ளூர் உள்பட 17 மாவட்டங்களில் 5-க்கும் குறைவானோர் மட்டுமே பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதில் 12 வயதுக்கு உட்பட்ட 18 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 8 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
19 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை
மேலும் அரியலூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கரூர், மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சேலம், தென்காசி, திருப்பத்தூர், திருவாரூர், திருநெல்வேலி, திருச்சி, விழுப்புரம் ஆகிய 19 மாவட்டங்களில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை.
தமிழகத்தில் இதுவரை 6 கோடியே 40 லட்சத்து 18 ஆயிரத்து 735 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, 34 லட்சத்து 52 ஆயிரத்து 276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 171 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 80 பேர் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளிலும், 20 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழப்பு இல்லை
தமிழகத்தில் நேற்று எந்த மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 38 ஆயிரத்து 25 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்து உள்ளனர். இத்தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 127 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு உள்ளனர். சிகிச்சையில் 730 பேர் உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story