திருவாரூர்: மனைவியின் கள்ளக்காதலன் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்ற கணவன்...!
திருவாரூர் அருகே மனைவியின் கள்ளக்காதலன் தலையில் அம்மிக்கல்லை போட்டு கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதிகள் சசிகுமார்- பிரியா. இவர்கள் திருப்பூரில் தங்கி இருந்து பனியன் கம்பெனியில் வேலைபார்த்து வந்துள்ளனர்.
கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்து உள்ளது. சண்டைக்கு முக்கிய காரணம் சசிகுமாரின் மனைவி தமிழரசன் என்பவருடன் கொண்டிருந்த தகாத உறவுதான் என்று கூறப்படுகின்றது.
இந்நிலையில் நேற்று இரவு வேலைக்கு செல்வதாக கணவனிடம் செல்லிவிட்டு சென்ற மனைவி பிரியா, தமிழரசன் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த கணவன் சசிகுமார் ஆவேசத்துடன் தமிழரசன் வீட்டிற்குச் சென்று உள்ளார். அங்கு தூங்கி கொண்டிருந்த தமிழரசன் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்துவிட்டு தப்பியோடினார்.
அதனை அறிந்த வேலம்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிரிழந்த தமிழரசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து சசிகுமாரை கைது செய்த போலீசார், அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவியின் கள்ளக்காதலனை கணவன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story