மதுரை: கணவனை அரிவாளால் வெட்டி கொன்ற மனைவி...!


மதுரை: கணவனை அரிவாளால் வெட்டி கொன்ற மனைவி...!
x
தினத்தந்தி 20 March 2022 1:45 PM IST (Updated: 20 March 2022 1:31 PM IST)
t-max-icont-min-icon

மதுரை அருகே கணவனை அரிவாளால் மனைவி வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலூர்,

மதுரை மாவட்டம் மேலூர் பல்லவராயன்பட்டியை சேர்ந்த வல்லான் என்பவரது மகன் பொன்னையன். இவர் கூலித்தொழிலாளி செய்து வருகிறார்.

பொன்னையனின் மனைவி அழகம்மாள். இந்த தம்பதிகளுக்கு கடந்த 14 வருடங்களுக்கு முன்பு திருமணம நடைபெற்றது. கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகின்றது. 

சரமாரி வெட்டு 

கணவனின் கொடுமையை ஒரு அளவிற்கு மேல் மனைவி அழகம்மாவால் பொறுத்து கொள்ள முடியவில்லை. இதனை அறியாத கணவன் பொன்னையா மனைவியிடம் இன்று வழக்கம் போல் தகராறு செய்து உள்ளார். 

இதனால் ஆத்திரம் அடைந்து பொறுமை இழந்த மனைவி அழகம்மாள் அருகே கிடந்த அரிவாளை எடுத்து கணவன் பொன்னையனை சரமாரியாக வெட்டினார். 

போலீசார் விசாரணை

இதில் கழுத்து, முழங்கை போன்ற இடங்களில் கணவன் பொன்னையனுக்கு பயங்கர வெட்டு விழுந்தது. பின்னர், ரத்த வெள்ளத்தில் சரிந்த கிடந்த பொன்னையனை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்த மேலூர் போலீசார் மனைவி அழகம்மாள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story