“திமுகவை ஆதரிப்பது தான் தமிழகத்திற்கு பாதுகாப்பு” - கனிமொழி எம்.பி.


“திமுகவை ஆதரிப்பது தான் தமிழகத்திற்கு பாதுகாப்பு” - கனிமொழி எம்.பி.
x
தினத்தந்தி 20 March 2022 3:59 PM IST (Updated: 20 March 2022 3:59 PM IST)
t-max-icont-min-icon

திமுகவை ஆதரித்தால் தான் தமிழகத்தை பாதுகாக்க முடியும் என்ற நிலை உருவாகி உள்ளதாக கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

நெல்லை,

ஊடகவியலாளர் டி.எஸ்.எஸ்.மணி எழுதியுள்ள, ‘மாண்புமிகு வேண்டுகோள் கடிதங்கள்’ நூல் வெளியீட்டு விழா, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் திமுக எம்.பி. கனிமொழி கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.

பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், திமுகவை எதிர்த்தவர்கள் எல்லாம் தற்போது திமுகவை ஆதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார். நாட்டிற்கு எது நல்லது செய்யுமோ, மக்களை எது பாதுகாக்குமோ, அதனை ஊடகவியலாளர்களும், எழுத்தாளர்களும் எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக அவர் கூறினார்.

மேலும் திமுகவை ஆதரித்து பேசினால் தான் தமிழகத்தை பாதுகாக்க முடியும் என்ற நிலை உருவாகி இருப்பதாகவும், அதன் காரணமாகவே எல்லோரும் திமுகவை ஆதிரித்து பேசுவதாகவும் கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். 
1 More update

Next Story