தமிழகத்தில் சேவை பெறும் உரிமை சட்டத்தை அமல்படுத்த வேண்டும்


தமிழகத்தில் சேவை பெறும் உரிமை சட்டத்தை அமல்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 23 March 2022 4:42 AM IST (Updated: 23 March 2022 4:42 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் சேவை பெறும் உரிமை சட்டத்தை அமல்படுத்த வேண்டும் கமல்ஹாசன் வலியுறுத்தல்.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

அரசின் சேவைகள் உரிய காலத்துக்குள் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யும் ‘சேவை பெறும் உரிமை சட்டம்’ தமிழகத்தில் அமல்படுத்தப்பட வேண்டும் என்பதை மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 21 மாநிலங்களில் நடைமுறையில் உள்ள இந்த சட்டத்தின் கீழ் சுமார் 150 சேவைகளை உரிய காலத்துக்குள் பெறமுடியும். உதாரணமாக அரியானாவில் 15 நாட்களில் ரேஷன் கார்டு, 8 நாட்களில் மின் இணைப்பு, 7 நாட்களில் சாதி சான்று, 12 நாட்களில் குடிநீர் இணைப்பு என கால வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுந்த காரணமின்றி இந்த சேவைகள் தாமதிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் சம்பளத்தில் பிடித்தம் செய்து மனுதாரருக்கு நஷ்ட ஈடாக வழங்குவதையும் இந்த சட்டம் உறுதி செய்கிறது. தேவையற்ற காத்திருப்பு, லஞ்சம் ஆகியவற்றை ஒழிக்க இந்த சட்டம் உதவும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story