"இலங்கையில் நிலவும் சூழல், 2 ஆண்டுகளில் நமக்கும் வரும்" - சீமான் எச்சரிக்கை
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி அடுத்த 2 ஆண்டுகளில் இந்தியாவிற்கு வரும் என்று சீமான் எச்சரித்துள்ளார்.
திருச்சி,
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி அடுத்த 2 ஆண்டுகளில் இந்தியாவிற்கு வரும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக திருச்சி குற்றவியல் நீதிமன்றத்திற்கு சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து எல்லா மாநில முதல்வர்களிடம் பேசி நீட் எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றி வலியுறுத்தலாம் என்று கூறினார். மேலும் அவர், நீட் தேர்வை ரத்து செய்ய மாநாடு கூட போடலாம் என்று கூறினார்.
நம் நாட்டினுடைய பொருளாதார கொள்கைகளால், இலங்கையில் பொருளாதார வீழ்ச்சி காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமை நம் நாட்டிற்கும் வரும் என்று கூறிய அவர், அதற்குள்ளாக எச்சரிக்கையுடன் விழித்து செயல்பட வேண்டும் என்று கூறினார்.
Related Tags :
Next Story