ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மீதான அவதூறு வழக்கை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்டு!
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் புகழேந்தியை கட்சியிலிருந்து நீக்குவதாக ஜூன் 14ஆம் தேதி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்தனர்.
இது சம்பந்தமான அறிக்கை தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க கோரி புகழேந்தி, சென்னை எம்.பி. எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் தனித்தனியே மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில், இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
Related Tags :
Next Story