திருப்பத்தூர் வேன் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - முதல்-அமைச்சர் அறிவிப்பு
திருப்பத்தூர் வேன் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை புதூர்நாடு அருகே செம்பரை பகுதியில் மினி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜவ்வாது மலை கிராமமான புலியூரில் இருந்து சேம்பரை கிராமத்தில் நடக்கும் திருவிழாவுக்கு சென்றபோது விபத்து நேர்ந்ததாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மினிவேன் பள்ளத்தில் கவிழ்ந்து 7 பேர் இறந்த நிலையில் மேலும் சிலர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் வேன் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த சுமார் 22 பேருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் தலா ரூ. 50 ஆயிரம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story