தென்காசி: குற்றால அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி...!
தென்காசி குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
தென்காசி,
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து உள்ளது
இந்த நிலையில் தென்காசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. சுமார் 2 மணி நேரமாக நீடித்த மழையால் சாலையில் தண்ணீர் தேங்கியது.
இத்தகைய மழையால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
அருவிகளில் தண்ணீர் வருவதை அறிந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் அருவிகளில் மகிழ்ச்சியுடன் குளித்து செல்கின்றனர்
மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி, புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
Related Tags :
Next Story