நிலக்கரிக்கு தட்டுப்பாடு: மின்வெட்டை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை


நிலக்கரிக்கு தட்டுப்பாடு: மின்வெட்டை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை
x
தினத்தந்தி 14 April 2022 12:38 AM IST (Updated: 14 April 2022 12:38 AM IST)
t-max-icont-min-icon

நிலக்கரிக்கு தட்டுப்பாடு: மின்வெட்டை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை - தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோடை காரணமாக மின்சாரத் தேவை ஒருபுறம் அதிகரித்து வரும் நிலையில், அதை ஈடு செய்யும் அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான நிலக்கரி இல்லாததால், ஒட்டுமொத்த இந்தியாவும் கடுமையான மின்வெட்டை சந்திக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. எதிர்கொண்டிருக்கும் சிக்கலை உணர்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், தமிழ்நாடு இருளில் மூழ்குவதை தடுக்க முடியாது.

இந்தியாவின் ஒட்டுமொத்த மின் தேவை, கடந்த 38 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது. தமிழ்நாடும் இதற்கு விதிவிலக்கு அல்ல. தமிழகத்தின் மின் தேவை கடந்த மார்ச் 29-ம் தேதி வரலாறு காணாத அளவில் 17,196 மெகாவாட், அதாவது 37.57 கோடி யூனிட்டாக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புறங்களில் மின்வெட்டு இல்லை என்றாலும் கூட, கிராமப்பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறையில் உள்ளது. நிலைமையை மேம்படுத்தாவிட்டால், தமிழகத்திலும் மின்வெட்டு தீவிரமடையும். இந்தியாவின் ஒட்டுமொத்த மின்சாரத் தேவையில் 75 சதவீதம் அனல் மின்நிலையங்களின் மூலமாகவே நிறைவேற்றப் படுகிறது என்பதால், நிலக்கரி உற்பத்தியில் ஏதேனும் அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே மின்சார வெட்டை தடுக்க முடியும். அடுத்த மாதம் முதல் காற்றாலை மின்னுற்பத்தி தொடங்கும் என்பதால், அதை முழுமையாக தமிழகமே கொள்முதல் செய்யவேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் தமிழகத்தை மின்வெட்டிலிருந்து காக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story