"அண்ணாமலையை கைது செய்ய வேண்டும்" - பி.எப்.ஐ. அமைப்பினர் டிஜிபி அலுவலகத்தில் புகார்


அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் - பி.எப்.ஐ. அமைப்பினர் டிஜிபி அலுவலகத்தில் புகார்
x
தினத்தந்தி 18 April 2022 11:40 PM IST (Updated: 18 April 2022 11:40 PM IST)
t-max-icont-min-icon

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என்று பி.எப்.ஐ. அமைப்பின் சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என்று பாப்புலர் பிரெண்ட் ஆஃப் இந்தியா (பி.எப்.ஐ) சார்பில் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

பாப்புலர் பிரெண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடைசெய்ய மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் எனவே பாஜக முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அண்ணாமலை பேசிய ஆடியோ சமூக வலைதளத்தில் பரவி வருவதாக புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலை மதக்கலவரத்தை தூண்டும் விதமாக செயல்படுவதாகவும் அவர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story