"இளையராஜாவுக்கு பாரத ரத்னா கொடுக்க வேண்டும்" - பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை
இளையராஜா பாஜகவை சார்ந்தவரல்ல என்றும், அவர் கூறியதை யாரும் அரசியலாக்க வேண்டாம் என்றும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை,
இளையராஜா பாஜகவை சார்ந்தவரல்ல என்றும், அவர் கூறியதை யாரும் அரசியலாக்க வேண்டாம் என்றும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியையும், அம்பேத்கரையும் ஒப்பிட்டு இளையராஜா கருத்து தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், சென்னை காரம்பாக்கத்தில், துப்புரவு பணியாளர்களுடனான சமபந்தி விருந்துக்கு பின் பேட்டியளித்த அண்ணாமலை, இளையராஜா பாஜகவை சார்ந்தவரல்ல என்றும், அவர் மக்களின் ஒட்டுமொத்த அன்பையும் பெற்றவர் என்று கூறினார். இளையராஜாவுக்கு உயரிய விருதான பாரத ரத்னா கொடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
மேலும்,அவர் கூறியதை யாரும் அரசியலாக்க வேண்டாம் என்றும் குறிப்பிட்டார். நான் ஒரு கருப்பு தமிழன், கருப்பு திராவிடன் என்று யுவன் சங்கர் ராஜா டுவிட்டரில் பதிவிட்டிருந்த நிலையில், நானும் கருப்பு தமிழன் தான், கருப்பு திராவிடன் தான் என்றும் அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story